மும்பையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக ஆட்டோ சேவை அளித்து வருகிறார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். இவர், மும்பை தியான்சாகர் வித்யா மந்திர் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். தற்போது, மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக இலவச ஆட்டோ சேவை அளித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து அவர் கூறுகையில், இதற்காக அவர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவித்தார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான மக்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் உயிரிழக்கின்றனர். இந்த சூழ்நிலையில், ஏழை நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் அரசாங்க உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், அந்த நேரத்தில் அவர்களுக்கு என்னுடைய சேவை கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என்றும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை இல்லத்திற்கு அழைத்து செல்கிறேன் என்றும் தெரிவித்தார். தற்போது வரை, 26 பேருக்கு இலவச ஆட்டோ சேவை அளித்துள்ளார். இவருடைய இந்த செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.