முக்கியச் செய்திகள் இந்தியா

கோவிஷீல்டைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசி விலையும் உயர்வு!

கோவிஷீல்டு தடுப்பூசியைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் உள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கும், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் ஜனவரி மாதத் தொடக்கம் முதல் நாடு முழுவதும் முன்கள பணியாளர்கள், பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. 

இதனிடையே கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை உயர்த்தியது சீரம் நிறுவனம். அதன்படி, 250 ரூபாயாக இருந்த தடுப்பூசியின் விலை மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இதனால் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் 150 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் கோவிஷீல்டைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையையும் உயர்த்தியுள்ளது பாரத் பயோடெக் நிறுவனம். அதன்படி, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.600க்கு விற்பனை செய்யப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு டோஸ் ரூ.1,200க்கு விற்பனை செய்யப்படும். ஏற்றுமதி என்றால் டோஸ் 15 டாலரில் இருந்து 20 டாலருக்குள்ளாக இருக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 

Advertisement:
SHARE

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து பயிலும் அமெரிக்க மாணவர்கள்

Ezhilarasan

30 ஆண்டுகள் சிறை: பேரறிவாளனுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்படுமா?

Halley Karthik

கருத்துக் கணிப்பு முடிவுகள்: கேரளாவில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

Gayathri Venkatesan