பிரபல இசை விருதுகளில் ஒன்றான கிராமி விருதை பாடகியும், பாடலாசிரியருமான பியோன்சே 32-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
இசைக்கான மிக உயரிய விருதான கிராமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் 65-வது கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், பியோன்சேவின் ‘பிரேக் மை சோல்’ பாடல் சிறந்த நடனம் மற்றும் எலெக்ட்ரானிக்க ரெக்கார்டிங் பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளது. இவரது ‘ரெனேசன்ஸ்’ ஆல்பம் சிறந்த எலெக்ட்ரானிக் மியூசிக் ஆல்பம் பிரிவில் விருதை வென்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே போல, பெஸ்ட் டிரெடிஷனல் ஆர் அண்ட் பி பெர்பார்மென்சில் பியோன்சேவின் ‘பிளாஸ்டிக் ஆஃப் தி சோஃபா’ பாடலும் கிராமி விருதை வென்றுள்ளது. மேலும், சிறந்த ஆர் அண்ட பி பாடலுக்கு கஃப் இட் பாடலுக்கு பாடியதற்காகவும், பாடல் வரிகளுக்காகவும் மற்ற பாடகர்களுடன் கிராமி விருதை பியோன்சே பகிர்ந்துள்ளார். இதன் மூலம் 32 விருதுகளை வென்று கிராமி விருது வரலாற்றிலேயே அதிகமான விருதை வென்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து பியோன்சே கூறுகையில், கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என் மாமா ஜானிக்கு நன்றி. அவர் இன்று இந்த உலகில் இல்லை. என் மீது மிகுந்த அன்பு செலுத்தும், என்னை உத்வேகப்படுத்தும் எனது பெற்றோர் மற்றும் எனது அழகான கணவர், குழந்தைகளுக்கு மிக்க நன்றி என்றார்.
அதே போல, திருநங்கை கிம் பெட்ராஸ் பெஸ்ட் பாப் டியோ என்ற பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளார். இதன் மூலம் முதல் கிராமி விருதை வென்ற திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அன்ஹோலி பாடலுக்காக இந்த விருதை சாம் ஸ்மித் மற்றும் கிம் பெட்ராஸ் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, கிம் பெட்ராஸ் பேசுகையில், அனைத்து திருநங்கைகளுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, எல்ஜிபிடிக்யூ சமுதாயத்தின் உரிமைக்காகப் போராடும் மடோன்னா, என்னுடைய தாய் மற்றும் மறைந்த என் தோழி சோபிக்கு மிக்க நன்றி என்றார்.
-ம.பவித்ரா.