நடிகர் விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன்-2 படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் நாளை மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஜீவா சங்கர் இயக்கிய ‘நான்’ திரைப்படம் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதைதொடர்ந்து இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிச்சைக்காரம் 2ம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா உள்பட வெளிநாடுகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் பிச்சைக்காரன் 2ம் பாகம் திரைப்படம் இந்த வருடம் கோடையில் வெளியாகும் என்று விஜய் ஆண்டனி தன் சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன் பிச்சைக்காரன்-2 படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
Money is Injurious to The World💣💀
பணம் உலகை காலி பண்ணிடும்💣💀
డబ్బు లోకాన్ని ఖాళీ చేస్తుంది💣💀#ANTIBIKILI 👺1st 4 mins, opening scene of #Pichaikaran2 #Bichagadu2
Sneak Peek Trailer 😈
will release tomorrow at 5PMSummer 2023🔥@vijaytelevision @StarMaa @DisneyPlusHS pic.twitter.com/n7NrvlKkc9
— vijayantony (@vijayantony) February 9, 2023
இந்நிலையில், பிச்சைக்காரன்-2 திரைப்படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக திரைப்படத்தின் இயக்குனரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாளை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த ட்ரைலர் வெளியாகவுள்ளது.







