இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்ட் என்ற பெருமையை கியாரா, சித்தார்த்தின் திருமணப் பதிவு பெற்றுள்ளது.
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை கியாரா ஆகியோர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வந்தது. முன்னதாக, அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும் தகவல் பரவி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக அவர்கள் திருமணம் குறித்த தகவல்கள் தான் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்திருந்தன.
இதைத்தொடர்ந்து, சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி திருமணம் பிப்ரவரி 7ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் உள்ள சூர்யஹர் அரண்மனை ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில், தங்களின் திருமண புகைப்படங்களை சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள், ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்று வருகிறது. அதில், “எங்களின் முன்னோக்கிய பயணத்தில் உங்களின் அன்பினையும் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம்” என கியாரா அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவை அதிக அளவிலானோர் லைக் செய்துவந்த நிலையில், இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்ட் என்ற பெருமையை கியாராவின் திருமணப் பதிவு பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஆலியா பட்டின் திருமணப் பதிவு 13.19 மில்லியன் லைக்குகளைப் பெற்றிருந்தது. அதேபோல, விக்கி கெளசல், கேத்ரினா கைஃபின் திருமணப் பதிவு 12.6 மில்லியன் லைக்குகளைப் பெற்றிருந்து. அந்த வரிசையில் சித்தார்த், கியாராவின் திருமணப் பதிவும் அதிக லைக்குகளைப் பெற்ற பதிவாக மாறியுள்ளது.
-ம.பவித்ரா









