முக்கியச் செய்திகள் சினிமா

பீஸ்ட் பட பாடல் யூ-டியூபில் புதிய சாதனை!

நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்றிருந்த ஹலமிதி ஹபிபோ பாடல் யூ-டியூப் தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் பாடியிருந்தனர். இந்தப் பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் உருவாக்கியிருந்தார். பாடல் யூ-டியூப் தளத்தில் வெளியான உடனேயே லட்சக்கணக்கான முறை பார்த்து ரசிக்கப்பட்டது. இன்று வரை தொடர்ந்து பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

பாடலில் இடம்பெற்ற நடனத்தைக் இளைஞர்கள் கொண்டாடினர். ரசிகர்களும் விஜய், பூஜா ஹெக்டே போன்று நடனமாடி சமூக வலைதளங்களில் பதிவேற்றி வைரலாக்கினர். சில இளம் நடிகைகளும் இந்தப் பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டு நடனமாடி அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி லைக்குகளை அள்ளினர்.

இந்நிலையில், அந்தப் பாடல் யூ-டியூப் தளத்தில் 20 கோடிக்கும் அதிகமான முறை பார்த்து ரசிக்கப்பட்ட பாடல் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நடிகை மந்திரா பேடி கணவர் திடீர் மரணம்: திரையுலகம் இரங்கல்!

EZHILARASAN D

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.4,000 நிவாரணம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை!

EZHILARASAN D

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நலத்துறை அமைக்க நடவடிக்கை: முதலமைச்சர்

Gayathri Venkatesan