வைகை அணை நீர்மட்டம் அதிகரிப்பு – இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.   தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி,…

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. இநிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 71 அடிய உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 69 அடிக்கு தண்ணீர் அதிகரித்துள்ளது.

 

இதையடுத்து வைகை ஆற்றின் கரையோர மக்களுக்குநேற்று முன்தினம் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் நேற்றும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால், கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ளை அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தற்போது அணைக்கு 2,634 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், நீர்மட்டத்தை 70 அடி வரை உயர்த்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்திருப்பதால்,இன்று மாலை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்த பின்னர் உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.