பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ தேர்வுக் குழு தலைவராக இருந்த சேதன் சர்மா ஸ்டிங் ஆப்ரேஷன் மூலமாக விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டது அம்பலமானது. இதனால் அவர் தேர்வுக்குழு…

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிசிசிஐ தேர்வுக் குழு தலைவராக இருந்த சேதன் சர்மா ஸ்டிங் ஆப்ரேஷன் மூலமாக விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டது அம்பலமானது. இதனால் அவர் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் விலகினார்.

இந்நிலையில் புதிய பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர்  நியமிக்கப்பட்டுள்ளார்.  சீனியாரிட்டி அடிப்படையிலும், அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றவர் என்ற அடிப்படையிலும் அஜித் அகர்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அகர்கர், இந்திய அணிக்காக 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 288 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி, கொல்கத்தா அணிகளுக்காக மொத்தம் 42 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது பெருமை அளிப்பதாக அகர்கர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.