“பயம்னா என்னனு தெரியணும்னா தேவரா கதையை கேட்கனும்” – தேவரா படத்தின் #ReleaseTrailer வெளியானது!

‘தேவரா’ திரைப்படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும்…

‘தேவரா’ திரைப்படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பின் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவாரா’. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் கதாநாயகியாக கால் பதித்துள்ளார். யுவசுதா ஆர்ட்ஸ்ட் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

சமீபத்தில், இப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. ‘தேவரா’ திரைப்படம் இந்த மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.