முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கை அதிபர் தேர்தலில் பசில் ராஜபக்சே போட்டி?

இலங்கையில் அடுத்து வரும் அதிபர் தேர்தலில், பசில் ராஜபக்சே போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை, அரசியலில் அவரது நெருங்கிய நண்பரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த கெட்டகொட பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2024-ல் அடுத்து நடைபெறும் அதிபர் தேர்தலில், பசில் ராஜபக்சேவை கட்டாயமாக முன்னிறுத்துவோம், என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும், பசில் நாடாளுமன்றத்திற்கு வருவதற்காகவே, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததாகவும், விரைவில் பசில் ராஜக்சே நிதி அமைச்சராகப் பதவியேற்பார் என்றும், அவர் கூறியுள்ளார். இலங்கையின் தற்போதைய அதிபரும் பசில் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவார், என அமைச்சர் நாமல் ராஜபக்சே சமீபத்தில் அறிவித்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தற்போதைய ஆட்சியின் அனைத்து அமைச்சகங்களுக்குமான பணித் திட்டத்தைத் தயாரித்து, அதை பசில் ராஜபக்சே கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, அடுத்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே சகோதரர்கள் இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

விமான விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரிப்பு

Gayathri Venkatesan

“ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவிற்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படவில்லை”

Halley karthi

முதலமைச்சர் பழனிசாமிக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்!

Halley karthi