வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு!

கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலியாக வங்கிகள் செயல்படும் நேரம் தமிழகத்தில் நாளை முதல் குறைக்கப்படுவதாக வங்கியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், 26 ஆம் தேதி முதல் திரையரங்கம்,…

கொரோனா 2-வது அலை பரவல் எதிரொலியாக வங்கிகள் செயல்படும் நேரம் தமிழகத்தில் நாளை முதல் குறைக்கப்படுவதாக வங்கியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், 26 ஆம் தேதி முதல் திரையரங்கம், வணீக வளாகம், அழகு நிலையங்கள், ஜவுளிக்கடைகள், உடல்பயிற்சி மையங்கள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார், அரசு பேருந்துகளில் இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படும்.

உணவகங்கள், தேனீர் கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்றும் உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதியில்லை என்பது உள்ளிட்ட பல கட்டுபாடுகளை அரசு விதித்துள்ளது. இதனையடுத்து, வங்கிகள் செயல்படும் நேரம் தமிழகத்தில் நாளை முதல் குறைக்கப்படுவதாக மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏடிம்கள் 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவித்துள்ளது. மேலும் உடல்நலன் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பார்வை மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆதார் பதிவு மையங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி நேர வரை செயல்படும் என்ற நடைமுறையில் இருக்கும் எனவும் பின்னர் நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் மீண்டும் முடிவு செய்யப்படும் என்றும் வங்கியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.