முக்கியச் செய்திகள் குற்றம்

கடன் தர மறுத்த வங்கி: தீ வைத்த நபர்!

கர்நாடகாவில் கடன் தர மறுத்த வங்கிக்கு தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பாதாகி பகுதியிலுள்ள கனரா வங்கிக்கிளையில், ரட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த வாசிம்முல்லா என்பவர் கடன்கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார். இவரது மனுவை பரிசீலனை மேற்கொண்ட வங்கி மேலாளர், மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வாசிம்முல்லா, நள்ளிரவில் ஜன்னல் வழியாக வங்கியினுள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் வங்கியிலிருந்த 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமுற்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வாசிம்முல்லா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வாசிம்முல்லா என்பவரின் இந்த கொடூர செயலை கண்டித்து, சமூக வலைத்தள பக்கங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில், கேலி மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முதல் மாநிலமாகிறது கர்நாடகா

Halley Karthik

வீங்கிய முகம் – இழப்பீடு கோரும் நடிகை!

Halley Karthik

ஜேஎன்யு வன்முறை சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை

Halley Karthik