முக்கியச் செய்திகள் இந்தியா

வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்?

தொழிலாளர் நல ஆணையத்துடனான சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதை அடுத்து திட்டமிட்டபடி ஜூன் 27-ம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தம் இருக்கும் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளது.

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, சனி மற்றும் ஞாயிறு விடுப்பு, பென்ஷன் தொகையில் முன்னேற்றம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 27ம் தேதி வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறை கூவலை விடுத்துள்ளானர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை அடுத்து மத்திய அரசின் தொழிலாளர் நல ஆணையர் SC ஜோஷி சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். பேச்சு வார்த்தைகள் மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் வலியுறுத்திய நிலையில் நிர்வாகத் தரப்பில் எந்தவித உறுதிமொழியும் அளிக்கப்படாத காரணத்தினால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் வரும் ஜூன் 27ம் தேதி இருக்கும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஜூன் 27ம் தேதி திங்கட்கிழமை வரும் காரணத்தினால் சனி மற்றும் ஞாயிறு விடுப்பை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் இருக்கும் பட்சத்தில் பணப்பரிவர்த்தனை மற்றும் பொதுமக்களுக்கான வங்கி சேவை பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தொழிலாளர் நல ஆணையம் வரும் 23ம் தேதி மீண்டும் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உயர் நீதிமன்ற மதுரை கிளை

Halley Karthik

ஒமிக்ரான் பாதிப்பு 415 ஆக அதிகரிப்பு

Halley Karthik

27% இடஒதுக்கீடு அதிமுக சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ், இபிஎஸ்

Ezhilarasan