வங்கதேசத்தில் ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைக்கபட்ட ஜோடியின் திருமண அழைப்பிதழ் X தளத்தில் வைரலாகிறது.
அண்மை காலங்களாக தம்பதி தங்களுடைய திருமண அழைப்பிதழை வடிவமைக்க நிறைய யோசிக்கிறார்கள். திருமண அழைப்பிதழ் நகைச்சுவைக்காக சமூக வளைதளத்தில் வைரலாகுவதால் அனைவரும் அதே போல தங்களுடைய திருமண அழைப்பிதழை வடிவமைப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
சமீபத்தில், தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஜோடி, அழைப்பிதழை ஆக்கப்பூர்வமான சிந்தனையை எடுத்து, டேப்லெட் ஸ்டிரிப்பின் பின்புறம் போல வடிவமைத்துள்ளனர்.
இது போன்ற புதுமையான மற்றும் நகைச்சுவையான திருமண அழைப்பிதழ்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி அனைவரையும் மகிழ்விக்கின்றன.
அந்த வகையில், வங்கதேசத்தில் ஒரு பிஎச்டி முடித்த ஜோடி தங்களுடைய திருமண அழைப்பிதழை ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைத்துள்ளது வைரலாகி வருகிறது.







