விமானம் நடுவானில் பறந்தபோது மாரடைப்பு ஏற்பட்ட விமானி உயிரிழப்பு

விமானம் நடுவானில் பறந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு நாக்பூரில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேச விமானி உயிரிழந்தார். வங்கதேச விமானமான  பிமன் பங்களாதேஷ் மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு சில நாட்களுக்கு முன் சென்றுகொண்டிருந்தது. அதில் 126…

விமானம் நடுவானில் பறந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு நாக்பூரில் சிகிச்சை பெற்று வந்த வங்கதேச விமானி உயிரிழந்தார்.

வங்கதேச விமானமான  பிமன் பங்களாதேஷ் மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு சில நாட்களுக்கு முன் சென்றுகொண்டிருந்தது. அதில் 126 பயணிகள் இருந்தனர். விமானம் இந்திய எல்லைக்குள் வந்தபோது விமானி நவ்ஷத் அதுல் கய்யாமுக்கு (வயது 49) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால், மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து தரையிறக்க அனுமதி கோரினார். ஆனால் விமானம் ராய்ப்பூர் அருகில் வந்துகொண்டிருந்ததால் நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

கொல்கத்தாவில் இருந்து நாக்பூர் விமான கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. பின்னர் நாக்பூர் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. விமானி, ஆம்புலன்ஸ் மூலம் நாக்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் 11 மணி நேரத்துக்குப் பிறகு அந்த விமானம் டாக்கா சென்ற டைந்தது.

நாக்பூர் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த விமானி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை மோசமாக இருப்பதாகக் கூறப்பட்டது. அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.