ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் வாஷிங் டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
14-வது ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகளில் சில இப்போது துபாய் சென்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அங்கு பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக நாடு திரும் பினார்.
காயம் முழுமையாக குணமாகவில்லை என்பதால் ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங் களில் இருந்து அவர் விலகி இருக்கிறார். இதை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக மேற்கு வங்க வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ்தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சீசனுக்கான பெங்களூரு அணியில் இருந்து விலகும் 5-வது வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆவார்