தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கி நன்றி தெரிவித்த பாங்காக் மலேசிய தமிழர்கள்!

இரண்டாம் உலகப்போரின்போது தாய்லாந்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி அந்நாட்டில் நடுகல் அமைக்க நிதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாங்காக் மலேசிய தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.  இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா…

இரண்டாம் உலகப்போரின்போது தாய்லாந்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி அந்நாட்டில் நடுகல் அமைக்க நிதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாங்காக் மலேசிய தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஈடுபடுத்தினர். அப்போது  அயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்த தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தமிழ் மரபுப்படி தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் மே 1ம் தேதி தாய்லாந்து தமிழ் சங்கம்  மற்றும் மலேசியத் தமிழர்களின் சார்பில்  “நடுகல்” திறப்பு விழா நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : “மக்களின் மனதின் குரலைக் கேளுங்கள்!” – பிரதமர் மோடிக்கு ஒய்எஸ் சர்மிளா ரேடியோ அனுப்பி வைப்பு!

இந்த நடுகல் அமைக்கும் பணிக்காக தமிழ்நாடு அரசு சார்பில்  ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.  இந்நிலையில், நடுகல் அமைக்க நிதி அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாங்காக் மலேசிய தமிழர்கள் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர்  அப்துல்லா எம்.பி. தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :

“இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தமிழ் மரபுப்படி தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் (01.05.2024) தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “நடுகல்” திறப்பு விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தும், நடுகல் அமைக்க நிதி அளித்தமைக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாங்காக் மலேசிய தமிழர்கள் சார்பாக நன்றி தெரிவித்து வழங்கிய நினைவுப் பரிசினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருடன் இணைந்து வழங்கினோம்”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/pudugaiabdulla/status/1788115006816670178?t=31t2IiH6X34wzXufCS8iGQ&s=08

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.