சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 166 ரன்கள் இலக்கு நிர்ணயத்துள்ளது. டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே…

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 166 ரன்கள் இலக்கு நிர்ணயத்துள்ளது.

டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.  இதில் சென்னை,  பெங்களூரு,  மும்பை,  கொல்கத்தா, ஹைதராபாத்,  டெல்லி,  பஞ்சாப்,  குஜராத், லக்னோ,  ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.  இதுவரை 56 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தி இன்று நடைபெறும் 57வது லீக் ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சு செய்தது.

இதையும் படியுங்கள் : குடிநீரில் மாட்டுசாணம் கலந்ததாக கூறப்படும் வழக்கு – பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் டி காக் களமிறங்கினர். 2 ரன்களில் டி காக்  ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 3 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து கேஎல் ராகுலுடன் குர்ணால் பாண்ட்யா இணைந்து விளையாடினர். குர்ணால் பாண்ட்யா 24 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து, கேஎல் ராகுல் 33 பந்துகளில் 29 பந்துகளில் வெளியேறினார்.  அடுத்து களமிறங்கிய பதோனி மற்றும் பூரன் இணைந்து விளையாடி ரன்களை உயர்த்தினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி அரை சதம் அடித்து அசத்தினார். பதோனி 55 ரன்களிலும் பூரன் 48 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் பேட் கம்மின்ஸ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.