மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில், 400 சட்ட விரோத இணைய தளங்கள் மற்றும் 29 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது