எலக்ட்ரானிக் காலமான இன்று கைக்குழந்தை முதல் முதியவர் என அனைவரது கரங்களிலும் செல்போன்கள் தவழுகின்றன. சாப்பிடுவது தூங்குவது பொன்று சமூக வலைதளங்களில் உலாவுவதும் ஒரு பழக்கமாக ஆகிவிட்டது.
சமூக வலைதளங்களில் பல நன்மைகள் இருந்தாலும் சிறுவர்களில் செல்போன்களுக்கு அடிமையாகின்றனர் என்று குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகின்றனர். மேலும் இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று அவர்களுக்கு உடல் மற்றும் மனதளவில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பதின்ம வயதிற்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை செய்துள்ளன.
இந்த நிலையில் இந்தியாவின் கார்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பதின்ம வயதிற்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக
அதே போல ஆந்திராவிலும் சட்டமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த அடுத்த 90 நாட்களுக்குள் தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழ் நாட்டிலும் குழந்தைகள் செல்போன்களுக்கு அடிமையாகுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதனால் தமிழ் நாட்டிலும் பதின்ம வயதிற்குட்பட்டோருக்கு சமூக வலைதளங்களை பயான்படுத்த தடை விதிக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.







