இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடை நீங்கியது

இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்க, முன்னாள் நீதிபதி தேவ் தலைமையில் மூன்று பேர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதன் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்குழுவில் மாற்றம்…

இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்க, முன்னாள் நீதிபதி தேவ் தலைமையில் மூன்று பேர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இதன் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்குழுவில் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ‘FIFA’, இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை விதித்தது. அதுமட்டுமின்றி 17 வயதை கடந்த பெண்களுக்கான உலக கோப்பை அக்டோபர் 11 முதல் 30 வரை நடக்க இருந்த வாய்ப்பையும் பறித்தது.

FIFA‘ நெருக்கடி காரணமாக மூவர் குழுவை, உச்சநீதிமன்றம் கலைத்தது. செப்டம்பர் 2ல் மீண்டும் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்திய கால்பந்து மீதான தடையை 12 நாளுக்குப் பின் நேற்று ‘FIFA’ நீக்கியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கால்பந்தின் தினசரி விவரங்களை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு கவனித்துக் கொள்வது குறித்து ‘FIFA’ நிபந்தனைகள் ஏற்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடை நீக்கப்படுகிறது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல் திட்டமிட்டபடி பெண்களுக்கான உலக கோப்பை தொடரை இந்தியாவில் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.