32.4 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமராவிற்கு தடை – இன்று முதல் அமல்..!

பழனி மலைக் கோயிலுக்குள் செல்போன் , கேமரா கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி மலைக்கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்போன், கேமரா ஆகியவற்றை  கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கருவறையில் உள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலை, தங்கக் கோபுரம், தங்கத் தேர், தங்க மயில் ஆகியவற்றை திருவிழாக் காலங்களில் சிலர் கைப்பேசியில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவது வழக்கம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் மலைக் கோயிலில் புகைப்படம் பிடிக்கக் கூடாது என பல இடங்களில் அறிவிப்பு பலகை இடம்பெற்றும் பக்தர்கள் அதனை கண்டுகொள்வதில்லை. அண்மையில் பலரும் மூலவரைப் படமெடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் முருக பக்தர் ஒருவர் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியது.

இதையடுத்து, இன்று ( அக்டோபர் 1 ) முதல் பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கைப்பேசி, புகைப்பட கருவிகளைக் கொண்டு வர திருக்கோயில் நிர்வாகம் தடைவிதித்து அறிவிப்பு வெளியிட்டது.

செல்போன் , கேமராவை கொண்டு வரும் பக்தர்கள் படிவழிப் பாதை, வின்ச் நிலையம், ரோப்கார் நிலையங்களில் இதற்கென அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் ஒரு கைப்பேசிக்கு ரூ. 5 கட்டணம் செலுத்தி, ஒப்படைத்துவிட்டு செல்லவும், தரிசனம் முடிந்த பின்னர் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த தடை உத்தரவு பழனி மலை முருகன் கோயிலில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading