நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை நட்சத்திர வீரர் மெஸ்ஸி தனதாக்கி கொண்டுள்ளார்.
கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்தது மட்டுமின்றி, நடப்பு தொடரில் அதிக கோல் அடித்த வீரரான பிரான்ஸின் கிளியன் எம்பாப்பே தங்கக் காலணி விருதை தட்டிச் சென்றார். இதேபோல், சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறை விருதை அர்ஜெண்டினா அணி வீரர் எமிலியானோ மார்டினேஸ் கைப்பற்றி அசத்தினார்.
சிறந்த இளம் வீரருக்கான விருதையும் அர்ஜென்டினா அணி கைப்பற்றியது. அந்த அணியின் என்ஸோ பெர்ணான்டஸ் சிறந்த இளம் வீரருக்கான விருதை பெற்றுக்கொண்டார். நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் அனைத்து நாக் – அவுட் போட்டிகளிலும் கோல் அடித்து அசத்திய நட்சத்திர வீரர் மெஸ்ஸி, தொடரின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்க பந்து விருதை உச்சி முகர்ந்தார்.