நேற்றைய நிகழ்வுகளே பலருக்கும் மறந்துபோகும் நிலையில், பத்தாயிரம் ஆண்டுகளில் நடந்ததை கூறி வியப்பூட்டுகிறார் சென்னையை சேர்ந்த மாணவர்.
வேளச்சேரி விஜிபி காலனியைச் சேர்ந்த வேலுச்சாமி – ஜீவபிரியா தம்பதியின் மகன் ஸ்ரீராம் பாலாஜி, கிண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். பார்க்க சாதுவாக தெரியும் ஸ்ரீராம் பாலாஜி, சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கான தேதிகள், கிழமைகள் உள்ளிட்டவற்றை துல்லியமாக கூறுவது தான், பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு தெரியவந்ததை அடுத்து, அடுத்த சில மாதங்களில் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று விருதுகளை குவித்திருக்கிறார் மாணவர் ஸ்ரீராம் பாலாஜி.
9 வயதில் தனது நண்பர்களின் பிறந்தநாளை ஞாபகம் வைத்து சரியாக சொல்ல ஆரம்பித்தவர், 10 ஆயிரம் ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகளை குறிப்பிடும் அளவுக்கு ஒரு நடமாடும் விக்கிப்பீடியாக உலா வருகிறார். முதலமைச்சர் முன்னிலையில் மாணவனின் சாதனை அரங்கேற வேண்டும் என்பதே தங்களது ஆசை என்றும் இவரது பெற்றோர் கூறுகின்றனர்.
ஆதம், நியூஸ் 7 தமிழ், சென்னை







