“பாகுபலி” வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர்.
2015-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி “பாகுபலி தி பிகினிங்” முதல் பாகம் வெளியானது. எஸ்எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோரின் அசத்தலான நடிப்பில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 180 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜட்டில் உருவான இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தின் பிரம்மாண்டம், திரைக்கதை, வசனம், ஒலிப்பதிவு என அத்தனை அம்சங்களும் விமர்சகர்களால் பாராட்டபட்டது. முற்றிலும் வித்தியாசமான கதை கலம் கொண்ட இத்திரைப்படம் கலை வடிவத்திற்கும் பெயர் போனது. மேலும் படத்திற்காக தேர்ந்தெடுக்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்தது.
180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே 600 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. உலகளவில் 650 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தென்னிந்திய திரைப்படம் இதுவாகும். அதிக வசூல் செய்த டப்பிங் திரைப்படம் என்னும் சாதனையும் படைத்தது. சிறந்த திரைபடத்திற்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது .மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடா மட்டுமல்லாமல் பாகிஸ்தான் நாட்டின் கராய்சி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் வாய்பை பெற்றது குறிப்பிடதக்கது.
‘பாகுபலி’ முதல் பாகம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், படத்தில் நடித்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா உள்ளிட்டோர், தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் படத்தை குறித்த தங்களது அனுவங்களை பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் “இந்திய சினிமாவின் பாதையையே மாற்றிய ஒரு திரைவரிசையில் பங்கெடுத்தது பெருமை. ‘பாகுபலி’க்கு என்றுமே என் இதயத்தில் விசேஷமான இடம் இருக்கும்” என நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.









