ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் மேக்கிங் வீடியோ ஜூலை 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவுள்ள நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களுக்குப் பிறகு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாக உள்ளது.
Get ready for the #RoarOfRRR! 💥
A glimpse into the making of #RRRMovie on July 15th, 11 AM. 🤘🏻@ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies @PenMovies @LycaProductions pic.twitter.com/x8xzG5TQ5E— DVV Entertainment (@DVVMovies) July 11, 2021
இந்த திரைப்படத்தை அடுத்தாண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ ஜூலை 15ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து #RoarOfRRR என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.







