பள்ளிகளுக்கு மத்திய அரசு சான்றிதழ் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், மத்திய அரசின் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதில், மாநிலத்தில் உள்ள…

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், மத்திய அரசின் சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதில், மாநிலத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும், மத்திய அரசின் Fit India Movement சான்று கட்டாயம் எனவும், இதுவரை மிகக்குறைந்த அளவிலான பள்ளிகளே சான்றுக்காக பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் 20ஆம் தேதிக்குள் பதிவு செய்து, அனைத்து பள்ளிகளும் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.