ஆற்றில் அடித்து வரப்பட்ட குட்டி யானை: தாய் யானையிடம் சேர்த்த வனத் துறையினர்

ஆற்றில் அடித்து வரப்பட்ட பிறந்து ஒரு சில நாட்கள் ஆனா குட்டியானையை மீட்டு தாய் யானையிடம் சேர்த்த கேரளா வனத்துறையினர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட சின்னார் வனப் பகுதியில் தமிழக…

ஆற்றில் அடித்து வரப்பட்ட பிறந்து ஒரு சில நாட்கள் ஆனா குட்டியானையை மீட்டு தாய் யானையிடம் சேர்த்த கேரளா வனத்துறையினர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச் சரகத்திற்கு உட்பட்ட சின்னார் வனப் பகுதியில் தமிழக – கேரள எல்லை இணைகிறது. இதன் அருகே மூன்று ஆறுகள் சங்கமிக்கும் கூட்டாறு உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் காரணத்தினால் இங்கு உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு இந்த ஆற்றில் பிறந்து ஒரு சில நாட்களான குட்டியானை ஒன்று அடித்து வரப்பட்டது. இதனை அறிந்த கேரள வனத் துறையினர் உடனடியாக அங்கு சென்று பல மணி நேரம் போராடி ஆற்றில் இருந்து குட்டி யானையை உயிருடன் மீட்டனர் மனிதர்களைக் கண்டு அஞ்சிய குட்டி யானை அவர்களுடன் செல்ல மறுத்து கத்தியது. இதனைத் தொடர்ந்து பல போராட்டங்களுக்குப் பிறகு குட்டி யானையை அழைத்துச் சென்று தாய் யானை இருந்த கூட்டத்தின் அருகில் விட்டனர். அந்த குட்டி யானை தாய் யானைவுடன் இணைந்தது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.