பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி, தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இடிக்கபட்டு 30 ஆண்டுகள் ஆன நிலையில் ஆண்டு தோறும் இந்த நாளில் நாடு முழுவதும் எந்த அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையில் முக்கிய ரயில் நிலையங்களான எழும்பூர் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே பயணிகளை அனுமதிக்கின்றனர். பயணிகளின் உடைமைகளையும் மோப்ப நாய் உதவியுடன் முழுவதுமாக சோதனை செய்யப்படுகிறது.
இதையடுத்து தமிழ்நாட்டிலுள்ள முக்கிய இடங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதையொட்டி, விருதுநகர் ரயில் நிலையத்தில் பயணிகள் தீவிர பரிசேரதனைக்கு பின்பு ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து ரயில்களும் தீவிர சோதனைக்கு பின்பே ரயில் நிலையத்தில் இருந்து சென்றன. மேலும் மோப்ப நாய் மூலம் பயணிகள் உடமை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர், மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல் துறை மற்றும் ரயில்வே போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். இதேபோல், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.