12 கிலோவில் பாகுபலி சமோசா! அரை மணி நேரத்தில் சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு!

உத்திரப்பிரதேசத்தில் 12 கிலோ எடை கொண்ட சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டால் ரூ.71,000 பரிசாக வழங்கப்படுவதாக ஒரு பேக்கரி அறிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இயங்கி வரும் பேக்கரி ஒன்றில் சுமார்…

உத்திரப்பிரதேசத்தில் 12 கிலோ எடை கொண்ட சமோசாவை 30 நிமிடங்களில் சாப்பிட்டால் ரூ.71,000 பரிசாக வழங்கப்படுவதாக ஒரு பேக்கரி அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் இயங்கி வரும் பேக்கரி ஒன்றில் சுமார் 12 கிலோ எடை கொண்ட சமோசாவை 30 நிமிடங்களுக்கு சாப்பிட்டு முடித்தால் ரூ.71,000 பரிசு வழங்குவதாக ருசிகரமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பெரிய சமோசாவிற்கு  ‘பாகுபலி சமோசா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாகுபலி சமோசாவின் விலை ரூ.1,500.

இந்த பேக்கரியின் உரிமையாளர் தனது தொழிலை பிரபலம் செய்யும் வகையிலும், புதிய வாடிக்கையாளர்களை கவரும் நோக்கிலும் இதை முன்னெடுத்துள்ளதாகவும், தனது வாடிக்கையாளர்களுக்கு வேடிக்கை நிறைந்த சவாலாக இது இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சமோசாவில் உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் பிரத்யேக மசாலா உள்ளிட்ட 7 கிலோவிற்கான பொருட்கள் வைக்கப்படுவதாக சமையலர் தெரிவித்தார்.

இதுவரை இந்த சமோசா சாப்பிடும் சவாலில் யாரும் வெற்றி பெறவில்லை எனவும், ஒரு வாடிக்கையாளர் மட்டும் அதிகபட்சமாக சுமார் 9 கிலோ சமோசாவை 25 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிச்சயம் இந்த சவாலில் யாரேனும் ஒரு வாடிக்கையாளர் வெற்றி பெறுவார் என நம்புவதாகவும், அதுவரை இது தொடரும் எனவும் கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் கலவையான வரவேற்பு கிடைத்துள்ளது. சிலர், தங்களால் முடியும் என ஆவலுடன் இந்த சமோசா சவாலில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். பலரும் தங்கள் பிறந்தநாளின்போது ‘கேக்’குக்கு பதில் இந்த சமோசாவை வாங்கி வெட்டி பகிர்ந்து உண்டு மகிழ்கிறார்களாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.