மே 17ம் தேதி வெளியாகிறது ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ அனிமேஷன் தொடர்!…

பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ அனிமேஷன் வடிவில் 17 மே, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்பட உள்ளது. கிராஃபிக்ஸ் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பில், S.S. ராஜமௌலி மற்றும் ஷரத்…

பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ அனிமேஷன் வடிவில் 17 மே, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்பட உள்ளது.

கிராஃபிக்ஸ் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் தயாரிப்பில், S.S. ராஜமௌலி மற்றும் ஷரத் தேவராஜன் வழங்கும் இந்த இணைய தொடருக்கு பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் எனப்பெயரிடப்பட்டுள்ளது. வருகிற மே 17ஆம் தேதி பிரத்தியேகமாக  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இணைய தொடராக ஒளிப்பரப்ப பட உள்ளது.

ஹாலிவுட்டுக்கு நிகரான இந்திய படைப்பான பாகுபலி, ஒரு இதிகாச காவியமாக ரசிகர்களை கவர்ந்த திரைப்படமாகும். 2015ல் முதல் பாகமும், 2ஆம் பாகம் 2017லிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதில் மகிழ்மதியின் ராஜ்ஜியத்தை ஆள சூழ்ச்சிகளால் எப்படி பல்வாள் தேவன் பாகுபலியை வீழ்த்தினான். அதற்கு எப்படி பாகுபலியின் மகன் பழி தீர்த்து மகிழ்மதியை மீட்டான் என்பது மையக்கதையாகும்.

இந்நிலையில், பாகுபலி திரைப்படத்தின் கதை துவங்குவதற்கு முன், பாகுபலி – பல்வாள் தேவன் இணைந்து எவ்வாறு மகிழ்மதியை காப்பாற்றினர். அப்போது என்னென்ன சிக்கல்கள் இருந்தது, எந்த மாதிரியான சூழ்ச்சிகள் இருந்தது, எப்படியான சூழல் இருந்தது என்பதை அனிமேஷன் வடிவில் விவரிக்கிறது பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்.

திரையில் இந்த மாபெரும் இதிகாச கதையை ரசிகர்கள் கண்டு ரசித்த நிலையில், அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அனிமேஷன் வடிவில் தயாரிக்கப்பட்டு பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட் வெளிவரவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.