‘அடுத்த பிரதமரை நீங்கள் தான் அடையாளம் காட்டப் போகிறீர்கள்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலினை, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டெல்லி செங்கோட்டையுடன் அவர் இருக்கும் வரைகலை செய்யப்பட்ட படத்தை தமிமுன் அன்சாரி வழங்கினார்.
அப்போது, ‘அடுத்த பிரதமரை நீங்கள் தான் அடையாளம் காட்டப்போகிறீர்கள் என்பதே இப்படத்தின் விளக்கம்’ என்று கூறி தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்தார். அந்த படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புன்னைகையுடன் பெற்றுக் கொண்டார்.
இதையும் படியுங்கள் : விருதுகளை அள்ளிக் குவித்த ‘Exhuma’…. Baeksang Arts Awards-ல் விருது வென்றவர்கள் யார் யார்? முழு லிஸ்ட்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மஜக பொதுச்செயலாளர் மெளலா. நாசர், பொருளாளர் J.S.ரிபாயி, இணைப் பொதுச்செயலாளர் கேப்டன் செய்யது முகம்மது ஃபாரூக் ஆகியோரும் உடனிருந்தனர்.
மஜக தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் அவருடன் வந்த நிர்வாகிகள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் வழங்கி உபசரித்தார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.







