முக்கியச் செய்திகள் தமிழகம்

B.Ed., மாணவர் சேர்க்கை- வழிகாட்டுதல்களை வெளியிட்டது உயர் கல்வித் துறை

B.Ed., மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டுதல்களை உயர் கல்வித் துறை வெளியிட்டது.

அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed., மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம். இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

B.Ed., சேர விரும்பும் பட்டியலினத்தவர்கள் 40%, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 43%, பிற்படுத்தப்பட்டோர் 45%, பொதுப் பிரிவினர் 50% மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும்.

இணையான படிப்புகள் ( Equivalent Degree ) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் UG அல்லது PG முடித்திருந்தாலும், தொடர்புடைய படிப்புகளில் B.Ed., சேரலாம். அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர http://www.tngasaedu.in இணையதளத்தை அணுகலாம்.

தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம் என்று வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் சிறையில் அடைப்பு

EZHILARASAN D

தேர்வில் பங்கேற்காத மாணவர்கள்- விசாரிக்க உத்தரவு

G SaravanaKumar

கேன்ஸ் திரைப்பட விழா: ‘பால்ம் டோர்’ விருது வென்ற ’டிடேன்’

Gayathri Venkatesan