ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்..!

தென்காசி, குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய…

தென்காசி, குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும்  தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து செல்கிறார்கள். இதனால் அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இன்று சனிக் கிழமை  (டிச.9) விடுமுறை தினம் மற்றும் ஐயப்ப சீசன் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும்  சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில்  ஐயப்ப பக்தர்கள் ஆனந்தமாக குளித்து, மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.