சுகாதாரத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் புதிய திட்டம்: பிரதமர் தொடங்கி வைத்தார்

நாடு முழுவதும் சுகாதாரத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அனைவருக்கும் சுகாதாரம் வழங்கும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் 3வது ஆண்டு விழா இன்று…

நாடு முழுவதும் சுகாதாரத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அனைவருக்கும் சுகாதாரம் வழங்கும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் 3வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஆயுஷ் மான் பாரத் டிஜிட்டல் மிஷன் என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

சுகாதாரத்துறையை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியான திட்டத்தை தொடங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகில் இந்தியாவைப் போன்று மாபெரும் டிஜிட்டல் கட்டமைப்பை கொண்ட நாடு இல்லை என தெரிவித்தார்.

சுமார் 90 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா சாதனை படைத்தி ருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதில் இருக்கும் சிக்கல்களை புதிய திட்டம், தீர்க்கும் என தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.