முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல்: சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் தொடரில், இன்று நடக்கும் 40 வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரின், இந்த சீசனில் ஐதராபாத் அணி மோசமான தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. ஒன்பது போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி, ஒரு வெற்றி 8 தோல்வி களுடன் 2 புள்ளியை மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி, அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது.

அதிரடி ஆட்டக்காரரான அந்த அணியின் டேவிட் வார்னர் மோசமான ஃபார்மில் இருக்கி றார். இந்த சீசனில் அவருடைய ஆவரேஜ் வெறும் 24.4 ஆக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இரண்டாவது மோசமான பேட்டிங் ஆவரேஜ் இது. வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் ஆவரேஜ், 57. ஐபிஎல் தொடரில் இதுவும் மிகவும் மோசமான ஆவரேஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வில்லை. மற்ற பேட்ஸ்மேன்களும் சொல்லிக் கொள்ளும்படியாக ஆட வில்லை.

சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் ஹோல்டர் மட்டுமே தனது பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர். இன்றைய போட்டியில் தங்கள் தவறுகளில் இருந்து அந்த அணி மீண்டு வந்தால், வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஒன்பது போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்வி களுடன் 8 புள்ளிகளை மட்டுமே பெற்று 6 வது இடத்தில் இருக்கிறது. கடந்த போட்டியில், அந்த அணியில் லெவிஸ், கிறிஸ் மோரிஸ் இடம்பெறவில்லை. அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, டேவிட் மில்லரும் ஷம்சியும் களமிறக்கப்பட்டனர். ஆனால் இருவருமே ஜொலிக்கவில்லை. அதனால் இன்றைய போட்டியில் லெவிஸும் மோரிஸும் களமிறக்கப் படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த போட்டியில் வென்றால் அடுத்த சுற்று வாய்ப்புக்கான நெருக்கடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு குறையும் என்பதால், வெற்றிபெறும் முனைப்பில் அந்த அணி களமிறங்கும். இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேக மில்லை.

Advertisement:
SHARE

Related posts

தேசிய கல்விக் கொள்கை: ரமேஷ் பொக்ரியால் ஆலோசைன

Vandhana

பஞ்சாப்பின் புதிய முதலமைச்சர் யார்? பரபரக்கும் தகவல்

Ezhilarasan

விராட் கோலி அதிரடி; இங்கிலாந்துக்கு 157 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Saravana Kumar