போயிங் நிறுவனத்திற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம்: முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

தமிழ்நாட்டில் போயிங் நிறுவனத்திற்கு விமான உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. சேலத்தில் அமைந்துள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் நிறுவனம், உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து…

தமிழ்நாட்டில் போயிங் நிறுவனத்திற்கு விமான உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சேலத்தில் அமைந்துள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் நிறுவனம், உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கு நீண்ட கால ஒப்பந்தத்தை போயிங் இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் னிலையில் வழங்கப்பட்டது. போயிங் இந்தியா நிறுவனத்தின் விநியோக மேலாண்மை இயக்குநர் அஸ்வனி பார்கவா, ஒப்பந்தத்தை வழங்க ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் நிறு வனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.சுந்தரம் பெற்றுக் கொண்டார்.

இது சேலம் மற்றும் ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்திலுள்ள வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கு ஓர் உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.