திருவாரூர் சரஸ்வதி கோயிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

திருவாரூர் அருகே கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோயிலில் ஆயுத பூஜையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம், கூத்தனூரில் கல்வியின் கடவுளாக கருத்தப்படும் சரஸ்வதிக்கு கோயில் அமைந்துள்ளது. இங்கு…

திருவாரூர் அருகே கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோயிலில் ஆயுத பூஜையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம், கூத்தனூரில் கல்வியின் கடவுளாக கருத்தப்படும் சரஸ்வதிக்கு கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடம் ஆயுத பூஜையையொட்டி, சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பாத தரிசன விழா விமரிசையாக நடைபெற்றது. மேலும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, நோட்டு, பேனா, புத்தகம் மற்றும் சிலேட்டு உள்ளிட்ட பொருட்களை சரஸ்வதி அம்மனின் பாதத்தில் வைத்து மாணவர்கள் வழிபட்டனர்.

இதையும் படியுங்கள் : தங்கம் விலை திடீர் சரிவு – சவரன் ரூ.45,280-க்கு விற்பனை..!

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.  பண்டிகையின் முக்கிய நிகழ்வாக, குழந்தைகள் தங்களின் கல்வியை தொடங்கும் விதமாக, “அ” என்று நெல்மணிகளில் எழுதவைக்கும் வித்யா ஆரம்பம் விழா நாளை நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.