நானி 31: ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என தலைப்பிட்டுள்ள படக்குழு!

நானியின் 31வது படத்திற்கு ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என பெயரிடப்பட்டுள்ளது. வெப்பம், நான் ஈ படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் நானி. தெலுங்கு சினிமாவின் டாப் மாஸ் ஹீரோக்களில் நடிகர்…

நானியின் 31வது படத்திற்கு ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என பெயரிடப்பட்டுள்ளது.

வெப்பம், நான் ஈ படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் நானி. தெலுங்கு சினிமாவின் டாப் மாஸ் ஹீரோக்களில் நடிகர் நானி தவிர்க்க முடியாதவர். மற்ற நடிகர்கள் தேர்வு செய்யும் கதைகளை விட சற்று வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து, அதில் மிகப்பெரிய வெற்றியையும் கொடுக்க கூடியவர் நானி. கடைசியாக நானி நடித்த தசரா படம் 100 கோடி வசூல் செய்து தெலுங்கு சினிமாவில் சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது நடிகர் நானி இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் தனது 31வது படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டிடிவி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க, வில்லனாக நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு நேற்று (அக்டோபர் 22) வெளியானது. இதனைத் தொடர்ந்து இன்று நானியின் 31வது படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.

நானி 31 படத்திற்கு ‘சரிபோதா சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவோடு வெளியாகி இருக்கிறது. சரிபோதா சனிவாரம் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை பார்க்கும்போதே இந்த படம் பக்கா மாஸ் ஆக்ஷன் படமாக தான் இருக்க போகிறது என்பது உறுதியாகிவிட்டது.

2022ஆம் ஆண்டு விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நடிகர் நானி, நடிகை நஸ்ரியா நடித்து வெளியான “அண்டே சுந்தரனிகி” ஒரு சூப்பர் ரொமாண்டிக் காமெடி படம். அந்த படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தற்போது ஒரு செம ஆக்ஷன் கதைக்களத்தில் நானியும் விவேக் ஆத்ரேயாயும் இணைந்திருப்பதால் சரிபோதா சனிவாரம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பை அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.