அயோத்தி ராமர் கோயிலின் முதல் வீடியோ வெளியானது!

அயோத்தி ராமர் கோயிலின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில்…

அயோத்தி ராமர் கோயிலின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் நாளை மறுநாள் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம்,  அயோத்தியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந் நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.  இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சிலை பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த 16-ஆம் தேதி (16.01.2024) அன்று தொடங்கின. 121 ஆச்சார்யார்கள் இச்சடங்குகளை மேற்கொண்டுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து வருகிற 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: வாட்ஸ்ஆப்புடன் போட்டிக்கு இறங்கும், எலான் மஸ்க் | X தளத்தில் வெளியான மாஸ் அப்டேட்…!

பிரதமர் மோடி,  ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்,  உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல்,  உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,  ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ராமர் கோயிலின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது.  இந்த வீடியோ கோயிலின் அழகிய அமைப்பைக் காட்டுகிறது.  பிரதிஷ்டையை முன்னிட்டு  கோயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு,  சிறப்பாக காட்சியளிக்கிறது.  பாரம்பரிய நாகரா கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோயில் 380 அடி நீளம் 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது.

நாகரா பாணி கட்டிடக்கலை வட இந்தியாவில் உருவானது. நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில்களில் ஷிகரஸ் எனப்படும் உயரமான பிரமிடு கோபுரங்கள் மற்றும் உச்சியில் கலாஷ் உள்ளது.  சுவர்கள் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.  அயோத்தி ராமர் கோயில் மூன்று மாடிகளைக் கொண்டது.  ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. இந்த கோயில்  392 தூண்களும், 44 கதவுகளும் கொண்டுள்ளன.

https://twitter.com/DDNewslive/status/1748553220065251461?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1748553220065251461%7Ctwgr%5E5f155548b31e408ac1612f7db29dde842fbbe5da%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Fwatch-first-video-of-ayodhya-ram-temple-from-inside-ahead-of-pran-pratishtha-ceremony-101705731500411.html

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.