#Ayodhya ராமர் கோயில் பாதைகளில் ரூ.50லட்சம் மதிப்பிலான புரொஜெக்டர் விளக்குகள் திருட்டு – உ.பி காவல்துறை விசாரணை!

அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பால ராமர் கோயிலை கடந்த…

#Ayodhya Ram temple theft of projector lights worth Rs 50 lakhs from pathways

அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பால ராமர் கோயிலை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிரதமர்  நரேந்திர  மோடி திறந்து வைத்தார்.  அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு தரிசனத்திற்காக செல்கின்றனர். ராமர் கோயிலுக்கு செல்லும் சாலைகளாக ராம மற்றும் பக்தி பாதைகள் பயன்படுகின்றன.

இந்த நிலையில் அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அயோத்தி காவல் துறையினர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது..

” அயோத்தி ராமர் கோயிலில் இடம்பெற்றுள்ள ராம பாதையில் 6,400 மூங்கில் விளக்குகளும், பக்தி பாதையில் 96 புரொஜெக்டர் விளக்குகளும் நிறுவப்பட்டிருந்தன. கடந்த மே 9-ஆம் தேதி அந்தப் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டபோது சில விளக்குகள் மாயமானது தெரியவந்தது. இதுவரை ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 பிரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.” என தெரிவித்தார்.

#Ayodhya Ram temple theft of projector lights worth Rs 50 lakhs from pathwaysஇந்த திருட்டு சம்பவம் தொடர்பாக விளக்குகளை நிறுவிய நிறுவனத்தின் பிரதிநிதி, ராமஜென்மபூமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அயோத்தி வளர்ச்சி குழுமம் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த விளக்குகளை அமைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.