சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்த நிலையில், பணிகள் நிறைவடையாததால் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் டீசரை படக்குழு தயார் செய்து வருவதாகவும் விரைவில் அதை வெளியிடுவார்கள் என்றும் தகவல் வெளியானது. பின்னர் அயலான் படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால் 2024 பொங்கல் வெளியீடாக இப்படம் மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
#AyalaanFromPongal #AyalaanFromSankranti 😊👍#Ayalaan 👽 pic.twitter.com/bbyf0PAoHP
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 23, 2023
சிவகாா்த்திகேயனின் மாவீரன் வெற்றிக்குப் பிறகு இந்தப் படம் வெளியாவதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது. இந்நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் படத்தின் டீசர் வெளியாகும் என கூறியுள்ளார்கள். மேலும் அயலான் திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.