அக்சரின் சிறப்பான ஆட்டம்… இந்திய அணி 262 ரன்கள் குவிப்பு…

அக்சர் மற்றும் அஸ்வின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் டீசன்டான ரன்னை எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி…

அக்சர் மற்றும் அஸ்வின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் டீசன்டான ரன்னை எடுத்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா சிறப்பாக ஆடி 81 ரன்களும், பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்ப் 72 ரன்களும் எடுத்தனர். இந்திய அணித் தரப்பில் முகமது சமி 4 விக்கெட்களும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியதும், வழக்கம்போல டாப் ஆர்டர்கள் சொதப்பினர். கோலி 44 ரன்களும், ரோஹித் 32 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். பிறகு அக்சர் பட்டேல் – அஸ்வின் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய அக்சர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அஸ்வின் 37 ரன்கள் எடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நேத்தன் லயன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்திய அணியைவிட 1 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தன் 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. காயம் காரணமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மேட் ரென்ஷா மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.