திரையரங்கில் அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது; கலை அனைவருக்கும் சொந்தமானது- ஜி.வி.பிரகாஷ்

பத்து தல திரைப்படத்திற்கு அனுமதி மறுத்ததை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. கலை அனைவருக்கும் சொந்தமானது என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான பத்து தல…

பத்து தல திரைப்படத்திற்கு அனுமதி மறுத்ததை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. கலை அனைவருக்கும் சொந்தமானது என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான பத்து தல படம் இன்று வெளியானது. இதையொட்டி இன்று காலை முதல் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பால அபிஷேகம் செய்தும் உற்சாக வெள்ளத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். படத்தின் முதல் காட்சியை பார்க்க ஏராளாமான ரசிகர்கள் சென்னை ரோகிணி தியேட்டரில் குவிந்தனர்.

இந்நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படத்தை பார்க்க வந்த சிலருக்கு, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் படம் பார்க்க உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்களிடம் டிக்கெட் இருந்தும் படம் பார்க்க உள்ளே அனுமதிக்காத ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நரிக்குற மக்கள் படம் பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிராகாஷ் தனது ட்விட்டர் பதிவில், அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்று பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.