திருத்துறைப்பூண்டி அருகே அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும்
முத்துப்பேட்டை காவல்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாச்சிகுளம் பகுதியில் உள்ள
அரசு மேல்நிலை பள்ளியில், தண்டலைச் சேரி அரசு கலைக் கல்லூரி சமூக பணி வகுப்பு
மாணவர்கள் மற்றும் முத்துப்பேட்டை காவல் துறையினர் இணைந்து பள்ளி
மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இருச்சக்கர வாகனத்தில் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் ஒரு
இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்க கூடாது. சாலையில் நடந்து செல்லும் போது சாலை கடக்கும் பொழுது நின்று கவனமாக கடந்து செல்ல வேண்டும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது.
இருசக்கர வாகன ஓட்டும் அனைவரும் லைசென்ஸ் எடுத்து ஓட்ட வேண்டும். அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி செல்லவதன் மூலம் நாம் விபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
பள்ளி மாணவர்களாகிய நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பெற்றோர்கள் உறவினர்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் பற்றி எடுத்து சொல்ல வேண்டும் என்றும் காவல்துறையினர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
—-அனகா காளமேகம்







