மார்பக புற்றுநோய் தொடர்பாக முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்ளும்
விழிப்புணர்வு மிகக் குறைவாக இருக்கிறது என கூட்டுறவு மற்றும் உணவுத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
PINK ON THE MOVE என்ற தலைப்பில் ரோட்டரி கிளப் சார்பாக மார்பகப் புற்றுநோய்
தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவு மற்றும்
உணவுத் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
தொடர்பான ஆலோசகர் மற்றும் பேச்சாளர் நீரஜா மாலிக், ரோட்டரி கிளப்பின்
டிஸ்ட்ரிக்ட் கவர்னர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும், பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்களிடம் மார்பக புற்றுநோய் தொடர்பான
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மார்பக புற்றுநோய் தொடர்பான அனைத்து
விவரங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் காரில் ஒட்டக்கூடிய QR code
பொருத்தப்பட்ட பிங்க் ஸ்டிக்கரும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்த கூட்டுறவு மற்றும் உணவுத்
துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘பிங்க் அக்டோபர் நிகழ்ச்சியை உலக அளவில் ஒருங்கிணைக்கிறார்கள். ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் சார்பாக செய்யக்கூடிய விழிப்புணர்வு மிகச் சிறப்பானது.
மார்பக புற்றுநோய் தொடர்பாக முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்ளும் விழிப்புணர்வு மிகக் குறைவாக இருக்கிறது. 20% நபர்கள் தான் முதற்கட்ட பரிசோதனையின் மூலம் மார்பக புற்றுநோயை கண்டறிகிறார்கள். ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் போன்ற மக்கள் பங்களிப்போடு ஏற்பட்டால் தான் விழிப்புணர்வு கிடைக்கும்.
கொரோனா தான் உலகத்திற்கு எடுத்துக்காட்டு. மார்பக புற்றுநோய் தொடர்பான அச்சம்
முதலில் விலக வேண்டும். மக்களிடம் உள்ள அச்சத்தை போக்கவே இது போன்ற
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது’ என்றார்.