12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.!

தமிழகத்தில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த…

தமிழகத்தில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மற்றமாநிலங்களில் ஆட்டோ கட்டண விகிதத்தையும் கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்படும் என்றும், அதற்கான பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தற்போது அந்த பரிந்துரைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

தமிழகத்தில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களில் ஆட்டோ கட்டண விகிதத்தையும் கருத்தில் கொண்டு மாற்றியமைக்கப்படும் என்றும் அதற்கான பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தற்போது அந்த பரிந்துரைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என தெரிவித்தது.


போக்குவரத்து துறை இணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டணத்தை மாற்றியமைக்கும் குழுவில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர்,நுகர்வோர் அமைப்பினர் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.