மகனின் உண்டியலை உடைத்து லாட்டரி: ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்தது ஜாக்பாட்

கேரளத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு, ஓணம் பம்பர் லாட்டரி மூலம் ஞாயிற்றுக்கிழமை ரூ. 25 கோடி பரிசு கிடைத்துள்ளது. திருவனந்தபுரம் அருகே ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப் (30). இவர் நேற்று…

கேரளத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருக்கு, ஓணம் பம்பர் லாட்டரி மூலம் ஞாயிற்றுக்கிழமை ரூ. 25 கோடி பரிசு கிடைத்துள்ளது.

திருவனந்தபுரம் அருகே ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப்
(30). இவர் நேற்று முன்தினம் மாலை திருவோண பம்பர் பரிசு சீட்டை பழவங்காடி
பகுதியில் உள்ள பகவதி லாட்டரி ஏஜென்சி கடையில் வாங்கியுள்ளார். அனூப் குடும்பம் வறுமை காரணமாக மலேசியாவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்துள்ளனர்.

இந்நிலையில், மகனின் உண்டியல் பணம் ரூ. 500ஐ எடுத்து வந்து 25 கோடிக்கணக்கான மாநில அரசின் திருவோண பம்பர் பரிசு லாட்டரி சீட்டு எடுத்துச் சென்ற நிலையில் அனூப்புக்கு அடித்தது அதிர்ஷ்டம். அனூப் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை ரூ. 25 கோடி பரிசு கிடைத்துள்ளதாக அவரது கைப்பேசிக்கு மெசேஜ் வந்துள்ளது. இதனால், அனூப் வியப்பில் ஆழ்ந்துள்ளார். மொத்த பரிசுத் தொகையான ரூ. 25 கோடியில் வரிச் சலுகை போக ரூ. 15.75 கிடைக்கும் என லாட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளன.

இதையடுத்து, தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஆற்றிங்கல்லில் உள்ள லாட்டரி ஏஜென்ஸியை அனூப் அணுகியுள்ளார். அப்போது, செய்தியாளா்களிடம் அனூப் கூறியதாவது: முதலில் ஒரு லாட்டரியை தோ்வு செய்தேன். அந்த எண் எனக்குப் பிடிக்காததால், வேறொரு எண்ணைத் தோ்வு செய்தேன். தற்போது நான் எடுத்த எண்ணுக்கு ரூ. 25 கோடி பரிசு கிடைத்துள்ளது. மலேசியாவுக்கும் செல்லப் போவதில்லை. நான் கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறேன். இதுவரை சில நூறுகளிலிருந்து அதிகபட்சமாக ரூ. 5,000 வரை வென்றுள்ளேன். ஆனால், இவ்வளவு பெரிய தொகையைப் பெறுவேன் என எதிா்பாா்க்கவில்லை.
இந்தச் சூழலில், எனது கைப்பேசியைப் பாா்த்தபோது, நான் லாட்டரியில் வென்றுவிட்டதாகத் தகவல் வந்தது. அதை என்னால் நம்பவே முடியவில்லை. உடனடியாக எனது மனைவியிடம் அதைக் காட்டினேன். அந்த லாட்டரி எண் பரிசு வென்றதை அவா்தான் உறுதிப்படுத்தினாா். என்னைவிட்டு இன்னமும் பதற்றம் நீங்கவில்லை. எனவே நான் லாட்டரி வாங்கிய கடையின் பணியாளா் பெண்ணைத் தொடா்பு கொண்டு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
இந்தப் பணத்தை வைத்து முதலில் வீடு கட்டுவேன். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவேன். எனது உறவினா்களுக்கு உதவுவேன். அறப்பணிகளைச் செய்வேன். கேரளத்திலேயே புதிதாக ஹோட்டல் தொழில் ஆரம்பிப்பேன். லாட்டரி சீட்டுகளை தொடா்ந்து வாங்குவேன் என்றாா்.
-ம.பவித்ரா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.