முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியாவின் இளம்படை; ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை!

பிரிஸ்பெனில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், 20ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது விளையாடியது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்த நிலையில் டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகளில் இரு அணிகளும் தல இரு போட்டியில் வெற்றியும் ஒருபோட்டி ட்ராவிலும் முடிவடைந்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 4வது போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பென் மைதானத்தில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்தது. 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய இளம்படையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 294 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிரிஸ்பேன் மைதானத்தில் 328 ரன்கள் மிகப்பெரிய இலக்கு என்பது மிகக்கடினம் என்ற நிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.

4வது நாள் அட்டத்தில் இந்திய 4 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் அந்த நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து 5 ஆவது நாளான இன்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியின் ரோகித் ஷர்மா, சுப்மன்கில் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது.

இருப்பினும் 7 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் ஷர்மா குமின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 146 பந்துகளை சந்தித்த சுப்மன் கில் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் ரஹேனே அதிரடியாக ஆட முற்பட்டார். இருப்பினும் 24 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அப்போது இந்திய அணி 167 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதனை தொடர்ந்து புஜாராவுடன் இணைந்த ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஆனால் அணியின் ஸ்கோர் 228 ஆக இருந்தபோது புஜாரா 221 பந்துகளில் 56 ரன்களில் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து மொத்த ஆட்டத்தையும் தன்கையில் எடுத்துக் கொண்ட ரிஷப் பந்த் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றார்.

இதனால் 97 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இதில் ரிஷப் பந்த் 89 ரன்களுடனும் நவதீப் சைனி ரன் ஏதும் எடுக்காமலும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு1 என்ற கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. மேலும் பிரிஸ்போன் மைதானத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதலில் ஆவின் பாலை தரமாக கொடுக்க முயற்சியுங்கள் – டாக்டர் கிருஷ்ணசாமி சாடல்

EZHILARASAN D

குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்: குவியும் பாராட்டுக்கள்!

எல்.ரேணுகாதேவி

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

Leave a Reply