நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கிரீன் மற்றும் ஹேசில்வுட் இணை பத்தாவது விக்கெட்டில் 116 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 2 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி பிப்.29 ஆம் தேதி லெவிங்ஸ்டனில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து பௌலிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 383 ரன்களை குவித்தது. ஆஸி அணியை தூக்கி நிறுத்திய கேமரூன் ஆட்டமிழக்காமல் 174 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 23 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். 10-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிரீன் மற்றும் ஹேசில்வுட் 116 ரன்கள் சேர்த்தனர்.
https://twitter.com/ICC/status/1763466794579222598
அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 43.1 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 71 ரன்களும் மாட் ஹென்றி 42 ரன்களும் எடுத்தனர். முதல் டெஸ்டில் ஆஸி அணி 217 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் 10-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு ஆஸ்திரேலிய அணியால் எடுக்கப்பட்ட 4-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
டெஸ்ட் போட்டிகளில் 10-வது விக்கெட் பார்ட்னர்ஷிப் எடுத்த அதிகபட்ச ஸ்கோர்கள்
- பிலிப் ஹியூஸ் & அஹர் – 163 ரன்கள் இங்கிலாந்துக்கு எதிராக, 2013
- டெய்லர் & மைலி 127 ரன்கள் – இங்கிலாந்துக்கு எதிராக, 1924
- டஃப் & ஆம்ஸ்டிராங் 120 ரன்கள் – இங்கிலாந்துக்கு எதிராக, 1902
- கேமரூன் கிரீன் & ஜோஸ் ஹேசில்வுட் 116 ரன்கள் நியூசிலாந்துக்கு







